திருவள்ளூர், ஏப்.30: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவள்ளூரை அடுத்த ஆவடி முத்தா புதுப்பேட்டை ஏர் போர்ஸ் ஸ்டேஷன் சர்வன்ட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி (வயது 23). இவர் கடந்த 23.1. 2017 அன்று 8 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் நடந்ததைக் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆவடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டனியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் குற்றம் நிரூபிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றவாளியான ஆண்டனிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பின்னர் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் ஆண்டனியை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.