சென்னை, ஏப்.30: சர்ஜிக்கல் அவென்யூ என்ற மருத்துவமனை உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நி
றுவனம் சார்பில் தரமணியில் உள்ள விஎச்எஸ் மருத்துவமனைக்கு 100 நவீன பல்நோக்கு சிறப்பு படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ரவுண்ட்டேபிள் 123, மற்றும் சென்னை ரோட்டரிக் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, நடிகர் வசந்த்ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சர்ஜிக்கல் அவென்யூ நிறுவனத்தின் இயக்குனர் அபிஷேக் ஜெயின் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.