சென்னை, ஏப்.30: தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 575 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல். 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

இது மேலும் வலுவடைந்து இன்று அதி தீவிரப் புயலாக மாறியிருக்கிறது. நாளை மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வந்து, அதன்பிறகு, வடக்கு, வடமேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்பகுதியை நெருங்கும் என வானிலை மையம் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.