புதுச்சேரி, ஏப்.30: தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தி, அவர்களின் மேன்மைக்கு பாடுபடுவோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது மே தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

மே தினத்தை யொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது வருமாறு:- வேளாண் தொழிலாளர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், பஞ்சாலைத் தொழிலாளர்கள் என அனைத்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த பாட்டாளிகளின் நலனில் எங்கள் அரசு எப்போதும் தனிக்கவனம் கொண்டுள்ளது.

அவர்களது வளமான வாழ்வுக்கு உத்திரவாதம் தரும் அரசாக இந்த அரசு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.