விழுப்புரம், ஏப்.30: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொறுப்பு) காந்தி உத்தரவிட்டார்.