நெல்லை, ஏப்.30: ஆலங்குளம் அருகே கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதியதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட 5 பேரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.