பழக்கிடங்கில் சிக்கிய அசாம் தொழிலாளி பத்திரமாக மீட்பு

சென்னை

சென்னை, ஏப்.30: ஆவடி அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பழக்கிடங்கில் நேற்றிரவு 7 மணியளவில் இரும்புத்தடுப்பு சரிந்து விழுந்த விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் ஆரிஃப், ஜெரால்டு, சைதுல், ஹயத் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.

மற்றவர்கள் அரைமணிநேரத்தில் மீட்கப்பட்ட நிலையில், அசாமை சேர்ந்த ஹயத் மட்டும் சுமார் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை 9 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டார். காலில் படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.