ஐதராபாத், ஏப்.30: ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் (56 பந்துகளில் 79 ரன்) போராடினாலும், மறுமுனையில் அவருக்கு கைக்கொடுக்க வீரர்கள் இல்லாதது அணியின் தோல்விக்கு ஒரு காரணமாயிற்று.

இது குறித்து, பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், எதிரணியை 195 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என நினைத்தேன்.

ஆனால் அது முடியாமல் போயிற்று. இருப்பினும், நாங்கள் பழைய போட்டிகள் குறித்து நினைத்து பார்ப்பதில்லை. தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, அவற்றை அடுத்த போட்டிகளில் சரி செய்ய முயற்சிக்கிறோம் என்றார் நம்பிக்கையுடன்.