491 மதிப்பெண்கள் பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவி

சென்னை

சென்னை, ஏப்.30: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவில் பள்ளி மாணவி ஐஸ்வர்யா 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் தலா 98 மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

மேலும் வேலம்மாள் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 37 மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு சில பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றமைக்காகப் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தது.