செங்குன்றம் , ஏப்.30: தேசிய சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்க இருக்கும் திருவள்ளூர் மாவட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான சிறப்பு பறிற்சி முகாம் செங்குன்றம் அருகே நடைபெற்றது.

11வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி மே மாதம் 3 முதல் 6 வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுகின்றனர்.

இந்திய சிலம்பாட்ட கழக தலைவர் மு.ராஜேந்திரன் தலைமையில் நடக்கும் போட்டிக்கு ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர், போட்டி அமைப்பாளர், தொழிலதிபர் யூ.ஆர்.சி. தேவராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் 23 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு எம்ஏ நகர், எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திடலில் சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட சேர்மன் ஜி.பால் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கமாண்டோ. ஏ.பாஸ்கரன் மாணவர்களின் வெற்றிக்கு ஊக்கப்படுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் ஆர். முருககனி வரவேற்றார்.

பொருளாளர் எம்.ராஜா, தொழில் நட்ப இயக்குனர் எஸ். துரை, தலைமை நிலைய செயலாளர் எஸ். ரதிராஜா, தேசிய நடுவர்கள் கே. பார்த்தீபன், வெற்றி செல்வன் கலந்து கொண்டனர்.