சென்னை, மே 2:இந்த ஆண்டுக்கான பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியது.

2019 – 2020 ம் ஆண்டுக்கான பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை யடுத்து பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ-மாணவியர் ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் நடைமுறை தொடங்கி உள்ளது. ஏராளமான மாணவ-மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இம்மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து ரேண்டம் எண் ஜூன் மூன்றாம் தேதியும் தரவரிசை பட்டியல் ஜூன்
17 ம் தேதியும் வெளியிடப்படும். ஜூன் 26ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

மாற்றத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும்.
12 ம்வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவு களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் WWW.TNEAONLINE.IN என்ற இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அதே இணையதள பக்கத்தில் கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.