சென்னை, மே 2:  தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோவில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பர்ஜன்ய சாந்தி வருணஜபம், சிவன், நந்திக்கு மகா அபிஷேகம், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம். சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம். மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களை கொண்டு இசை வாத்தியங்களால் இசைக்கச்சேரி நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.