சர்வதேச சிலம்ப போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு

தமிழ்நாடு

தூத்துக்குடி, மே 2: சிலம்பபோட்டியில் வெண்கல பதக்கம்பெற்றுசர்வதேச அளவில் சிலம்பபோட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவிக்கு மாவட்ட எஸ்பி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று, மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ள விளாத்திக்குளம் சப்-இன்ஸ்பெக்டரின் மகள் ஸ்வேதாவுக்கு மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப். 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற சிலம்ப விளையாட்டுக்கான தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி நாகர்கோவிலில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப்போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 600 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப்போட்டியில் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஜெயமணி என்பவரின் மகள் ஸ்வேதா என்பவர் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வ தேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

அவரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, பாராட்டி, அவர் மேலும், மேலும் வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி வாழ்த்தினார்