புதுடெல்லி, மே 2: பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் அளித்திருந்த புகார்கள் மீது வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் வாக்குப்பதிவன்றும் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி 9 புகார்களை தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்தது. அதற்கு நடவடிக்கை எடுக்காததையடுத்து அக்கட்சி நீதிமன்றத்தை நாடியது.

இது குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் திங்கட்கிழமைக்குள் காங்கிரஸ் கட்சியின் புகார் தொடர்பாக என்ன முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.