சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அதேபோல் லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணியும் மும்பையில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்நிலையில் தமிழில் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும்  காஞ்சனா-3 படத்தை ரஜினி பாராட்டி உள்ளார்.

இதனையடுத்து மும்பையில் ரஜினியை நேரில் சந்தித்து லாரன்ஸ் ஆசி  பெற்றார்.