கொல்கத்தா, மே 3: மேற்குவங்கத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு சென்ற ராணுவ வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹவுரா மாவட்டத்தில் ராணுவத்தின் அசாம் ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். இங்கு லட்சுமிகாந்த் என்ற வீரர், திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்ததில் போலோநாத் தாஸ் என்ற வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதற்கு என்ன காரணம், என்பது குறித்து தற்போது
விசாரணை நடைபெற்று வருகிறது.