பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்

உலகம்

இஸ்லாமாபாத், மே 3:ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்ததை தொடர்ந்து அவனுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில் “அசாருக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானம், முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அவனது சொத்துக்களையும் உடனடியாக முடக்க வேண்டும். இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மசூத் அசார் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. முன்னதாக மசுத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால், அதற்கு சீனா தொடர்ந்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வந்தது. சீனாவின் நடவடிக்கையை கண்டித்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் நெருக்கத லால் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். இது இந்தியா வின் ராஜதந்திர நடவடிக்
கைக்கு கிடைத்த வெற்றி என்று கருதப்படுகிறது.