சென்னை, மே 3: புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரேணுகா தேவி (வயது 41) என்ற பெண் நேற்று மாலை இட்லி வாங்குவதற்காக சாலையில் நடந்துசென்று  கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆசாமிகள் ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.