ஹரஹரமகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படத்தின் பூஜை நேற்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது.

பூஜையில் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பூஜையில் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர்கள் சரவணன், ஜமீல், ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் சக்திவேலன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.