பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

உலகம்

இஸ்லாமாபாத், மே 3: அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண பேச்சுவார்த்தை அவசியமானது என பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, கடிதம் எழுதியிருந்தார்.

அவரது வாழ்த்து கடிதத்திற்கு தற்போது பதில் கடிதம் எழுதியுள்ள இம்ரான்கான், இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை அவசியம் என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இம்ரான்கான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியாக இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.