வேலூர், மே 3: ஆம்பூர் அருகே வாகன தணிக்கை போலீசார் நடத்திய சோதனையில் லாரியில் கடத்தி வந்த தடை செய்யப்பட்டுள்ள ரூ. 50 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரிமற்றும் காரை ஓட்டி வந்த 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வாகன தணிக்கை போலீசார் வாசன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூர் நோக்கி சென்ற லாரியை மடிக்க போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாரியில்அரசால் தடை செய்யப் பட்டுள்ள போதைப் பொருட்களான குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ், உதவியாளர் சரவணவேல், மற்றும் காரில் வந்த கவுஸ், பையாஸ், இப்ராஹிம்,ஆகிய 5 பேரை கைது கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.