விக்ரம் வேதா இயக்குனர் படத்தில் அஜித்?

சினிமா

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இப்படத்தை ஸ்ரீதேவியின் போனிகபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குவதாக இருந்தது. இருப்பினும் அஜித்திற்கும், வினோத்திற்கும் ஒரு சில கருத்து மோதல்கள் இருந்ததால் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின.

தற்போது விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர், காயத்திரி சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து விட்டதால் அந்த படத்தில் நடிக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த உறுதியான தகவலை அஜித் தரப்பு தெரிவிக்கவில்லை.