புதிய வாகன பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

இந்தியா

புதுடெல்லி, மே 3: உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகள் இன்னும் தயாரிக்கப்பட வில்லை என்பதால் நாடு தழுவிய அளவில் ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய மோட்டார் வாகனங்களுக்கு பதிவுச்சான்றிதழ் (ஆர்சி) வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், தேசிய அளவில் இயக்கப்படும் அனைத்து விதமான வாகனங்களின் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக வாகனங்களில் வேகன் ‘டேட்டா பேஸ்’ என்ற புள்ளி விவரத்தை பின்பற்றி உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத் தும் திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் படி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதற்கென தனி வலைதளங்கள் உருவாக்கப்பட்டு பதிவாகும் ஒவ்வொரு வாகனங்கள் பற்றிய விவரங்கள் மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். நாடு தழுவிய அளவில் வாகனங்களை முறைப்படுத்தவும், தவறான வழிகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

டெல்லியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற போக்குவரத்துத்துறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அனைத்தும் வேகான் டேட்டாவை பின்பற்றியே இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.  இதை கண்டிப்பாக பின்பற்றுமாறு மத்திய போக்குவரத்து சார்பு செயலாளர் தர்கத் ஆர்.லூயிக்கான், அனைத்து மாநில போக்குவரத்து ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் சொந்தமாக மென்பொருள் தயாரித்து வேகன் புள்ளி விவரம் பின்பற்றுவதால் இந்த 3 மாநிலங் களில் மட்டும் ஆர்சி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளூர் விதிமுறைகளை பின்பற்றி உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கு காலதாமதம் செய்வதால் வியாழக்கிழமை முதல் புதிய வாகனங்களுக்கான ஆர்சி வழங்குவதை நிறுத்திவைக்குமாறு தேசிய புள்ளி விவர மையம் உத்தர விட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 79 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நாளொன்றுக்கு 3000 புதிய வாகனங் களுக்கு ஆர்சி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வாகனங்களுக்கு தற்காலிகமாக கூட அனுமதி வழங்கு வது நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இது குறித்து சென்னையில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் ஒன்றில் கேட்டபோது, நிறுத்தி வைக்குமாறு எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இருப்பினும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை விநியோகஸ்தர்கள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.