ஒட்டப்பிடாரம், மே 3; மக்களாகிய உங்களுக்கு அதிமுக அரசு வழங்கும் திட்டங்களை தடுக்க நினைக்கும் தி.மு.க. கும்பலுக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள் என்றும் தேர்தல் முடிந்தவுடன் ரூ.2ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மோகன் போட்டியிடுகிறார். மோகனுக்கு ஆதரவாக காயல் ஊரணி, புதியம்புத்தூரில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகன் ஒரு சாதாரண தொண்டர் ஆவார். தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனை வேட்பாளராக அறிவிக்க மாட்டார்கள். ஓட்டப் பிடாரம் தொகுதி என்றைக்குமே அதிமுக கோட்டையாகும். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் நீங்கள் எப்போதும் பற்று கொண்டவர்கள்.ஜெயலலிதா பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

வேட்பாளர் உங்கள் தொகுதியை சார்ந்தவர் பொங்கல் பரிசு ரூ.1000 தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைகோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 உதவித்தொகையை வழங்ககூடாது என்று புகார் கூறியுள்ளனர். தற்போது தேர்தல் காலம் முடிந்தவுடன் நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும்.

மக்களாகிய உங்களுக்கு அம்மா அரசு வழங்கும் திட்டங்களை தடுக்க நினைக்கும் தி.மு.க. கும்பலுக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள். அது மட்டுமல்லாது நம்மை எதிர்க்கும் துரோகியான அ.ம.மு.க.விற்கும் சரியான பாடத்தை புகட்டி இரட்டை இலையை அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.இவ்வாறுஅவர் கூறினார்.

பிரச்சாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட இணைசெயலாளர் தருவைக் குளம் மாடசாமி,, புதூர்பாண்டியாபுரம் ஊராட்சி கழக செயலாளர் கிருபாணந்த முருகன், சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்,, நடிகர் பிரபாத், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.