மோடி போல் தோற்றம் கொண்டவர் காங்கிரசுக்கு பிரச்சாரம்

அரசியல் இந்தியா

வாரணாசி, மே 3: பிரதமர் மோடி போட்டியிட்டு வாரணாசி தொகுதியில் அவரைப்போல் தோற்றம் கொண்டவர் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் கடந்த தேர்தலில் மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் ஆவார்.

மோடிக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் அவரை போன்று தோற்றம் உடைய அபிநந்தன் பதக் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் இத்தேர்தலில் வாரணாசியில் அபிநந்தன் பதக் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து ஓட்டுகேட்டு வருகிறார்.

பிரசாரத்தின் போது அவர் மோடி போல் பேசினார். நான் அரசாங்கத்தை வழி நடத்துவதில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று அவர் பேசி வருகிறார்.