கொல்கத்தா, மே 3:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் குல்தீப் யாதவ், ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிவந்தார். ஆனால், சரியாக சோபிக்காததால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் களம் இறக்கப்படவில்லை.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவருக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமோ? என்று கருதப்படுகிறது.

இது குறித்து, கொல்கத்தா தலைமை கோட்ச் கூறுகையில், 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது.
அவர் நல்லதொரு ஃபார்மில் நீடிப்பதற்காக கடும் வலை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆகவே, உலகக்கோப்பைக்கு அவர் தயாராக இருப்பார் என்பது உறுதி, என்றார்.

இதேபோல், முதுகு வலி காரணமாக டெல்லி அணியின் அதிரடி பவுலர் ரபாடா தற்காலிகமாக விலகியுள்ளார். உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வளிக்கலாம் என்ற நிலைப்பாடும் உள்ளது.

இது குறித்து, தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.