திருத்தணி, மே 3: திருத்தணி அருகே லாரி மோதி விவசாயி பலியானார். திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடைய மகன் விஜயன் (வயது 47) இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக தன்னுடைய வீட்டில் இருந்து திருத்தணி நோக்கி பைக்கில் வந்துள்ளார்.

அப்போது இவர் புதிய புறவழிச் சாலையில் வரும்போது எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

‘அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.