திருச்சி, மே 3:  ஸ்ரீரங்கத்தில் விருப்பன் திருவிழா எனும் சித்திரை திருவிழா இன்று நடைபெற்றது.அப்போது தேரில் பவனி வந்த ஸ்ரீரங்கநாதரின் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை பொருள்கள் அளிக்கப்பட்டன. காலை நடைபெறும் சித்திரை தேரோட்டத்தின் போது வஸ்திரப் பொருள்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொரு ட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அவை பக்தர்கள் பார்வைக்காக கருட மண்டபத்தில் வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவை மேள தாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், உள்ளிட்ட குழுவினர் வஸ்திர மரியாதை யை அளித்தனர். நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.