வாஷிங்டன் மே 4: அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் புளோரிடா நதியில் விழுந்தது.

அமெரிக்காவில் கியூபாவிலிருந்து, நவல் என்ற விமான நிலையத்திற்கு 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு போயிங் 737 விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது, நவல் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, புளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. எனினும், இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியா சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங் விமானம் பறக்க தடை விதித்துள்ள நிலையில், போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகின்றன குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜாக்சன்வில் மேயர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தின் எரிபொருள் நீரில் கலப்பதைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.