ஓடிசாவில் பானி புயலின் போது பிறந்த குழந்தைக்கு ‘பெண் பானி’ என பெயர் சூட்டியுள்ளனர்.

ஒடிசா  நேற்று புயல் தாக்கியபோது தலைநகர் புவனேஸ்வர் அருகேயுள்ள மான்செஷ்வாரில் உள்ள ரயில்வே மருத்துவமனையும் சேதமடைந்தது.

காலை சுமார் 11.03 மணியளவில் அங்குள்ள ரயில் பெட்டி சீரமைக்கும் பணிமனையில் வேலை செய்யும் உதவியாளரின் மனைவிக்கு ரயில்வே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.

 பானி புயல் தாக்கியபோது பிறந்த அந்த குழந்தையை `பெண் பானி’ என டாக்டர்கள் அழைக்கின்றனர்.  அந்த தாய்க்கு பிறந்த முதல் குழந்தை இது.  புயல் தாக்கியதில் மருத்துவமனை சேதமடைந்த நிலையில் கூட தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் இல்லை.