அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு புதிய பதிவாளர்

தமிழ்நாடு

சிதம்பரம், மே 4:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய பதிவாளராக டாக்டர் கிருஷ்ண மோகன் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தற்போது பொறியியல் துறை தலைவராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

புதிய பதிவாளர் இன்று 4-ம் தேதி பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.