புதுடெல்லி, மே 4:  உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகள் இல்லாத புதிய வாகன பதிவை நிறுத்தி வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் ஆந்திரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலை குறித்து மத்திய அரசிடம் முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வாகன பதிவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 1-க்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகளை வேகன் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.

இதற்கான மென்பொருளை தயாரிக்காத மாநிலங்களில் புதிய வாகன பதிவு (ஆர்சி) நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பிற மாநிலங்களில் இருந்து இந்த வசதியை பெற முடியும் என்பதால் வாகன பதிவை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய போக்குவரத்து செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட கூட்டம் மத்திய போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகள் தயாரிப்பதை தாமதப்படுத்திய விவகாரம் குறித்து வாதிக்கப்பட்டு மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.