மொஹாலி, மே 4: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், பஞ்சாப் அணி பிளே வாய்ப்பை இழந்துள்ளது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்ய, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் சாம் குர்ரன் தவிர, அதிரடி வீரர்கள் கெயில், ராகுல், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் அரைசதம் கூட தாண்டவில்லை.

பின்னர் 184 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தாவின் தொடக்க வீரர் சுப்மன் கில், 49 பந்துகளில் 65 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப் அணி பறிகொடுத்தது.