புதுடெல்லி,மே.5:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த 51 தொகுதிகளில் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மக்களவை தேர்லை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணயம் அறிவித்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில்-14, ராஜஸ்தானில்-12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7, பீகாரில்-5, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.இதைத் தவிர, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மற்றும் அனந்த்நாத் தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் முடிந்துள்ளது. நாளை நடக்க உள்ள, ஐந்தாம் கட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு – காஷ்மீரிலும் தேர்தல் முடிகிறது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரது தாயாரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் 5 -ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறும். 5-ம் கட்ட தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 8.76 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.