சேலம், மே 5:திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதி இடைத்தேர் தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந் துள்ளதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் இடைத்தேர்தலிலும் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி இடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே சூலூர் தொகுதியில்
பிரசாரம் செய்த அவர், இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணிக்கு தளவாபாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் 5.45 மணிக்கு வேலாயுதம்பாளையம், 6.30 மணிக்கு புன்னம் சத்திரம், இரவு 7.15 மணிக்கு க.பரமத்தி, 8 மணிக்கு தென்னிலை, 8.45 மணிக்கு சின்னதாராபுரம், 9.15 மணிக்கு நஞ்சை காளகுறிச்சி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்கிறார். 14-ம் தேதி வரை முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 நாட்களில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அவர் திண்ணைப் பிரச்சாரம், வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம், முச்சந்திகளில் திரண்டிருக்கும் மக்களிடையே பிரச்சாரம் என முறையில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று காலையில் சூலூர் சந்தைப் பகுதியில் பொது மக்களை சந்தித்து அவர், முன்னாள் அமைச்சர் பொங்க லூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டினார். இன்றும், நாளையும் சூலூரில் பிரச்சாரம் செய்யும் அவர் 7-ந் தேதியும், 8-ந் தேதியும் அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரச்
சாரம் செய்வார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த 4 தொகுதிகளிலம் வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.