புதுடெல்லி,மே.5:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்லை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், 5-ம் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில்-14, ராஜஸ்தானில்-12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7, பீகாரில்-5, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகளில் ஓட்டுப் பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத் தவிர, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மற்றும் அனந்த்நாத் தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கி உள்ளது.

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பிஜேபி வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பிஜேபி சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார்.