சென்னை, மே 6:நடிகர் அஜீத் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் மற்றும் வாஞ்சிநாதன் உள்ளிட்ட 17 திரைப்படத்தின் பாடல்களை, எலெக்ட்ரானிக் மீடியாக்களில் ஒலிபரப்பு செய்ய சோனி மியூசிக் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பே- ஷோர் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ’ வில்லன், வாலி, சிட்டிசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 17 தமிழ்த் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை அதன் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கியுள்ளேன். ஆனால், சோனி மியூசிக் நிறுவனம், இப்படங்களின் பாடல்களை திங்க் மியூசிக், யூ-டியூப், கானா மியூசிக், விங்க் மியூசிக் போன்றவற்றில் பதிவிட்டு ஒலிபரப்புகிறது. இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும்.
தங்கள் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி மியூசிக் தவறாக பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக, சோனி மியூக்கிடம் விளக்கம் கேட்டு, உரிய பதில் அளிக்கவில்லை. ஆகவே, 17 படத்தின் பாடல்களை சோனி மியூக் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர், வில்லன், வாலி உள்ளிட்ட 17 படத்தின் பாடல்களை எலெக்ட்ரானிக் மீடியாக்களில் பயன்படுத்த சோனி மியூசிக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.