சென்னை, மே 6: சென்னை அணி முக்கிய வீரரான கேதார் ஜாதவ் நேற்றையப் போட்டியில் பீல்டிங் செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால், எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை அணி கோட்ச் ஸ்டீபன் பிளெம்மிங் உறுதிசெய்துள்ளார். மேலும், அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது என்றும், நிலைமை மோசமில்லை என்றாலும், எதுவும் சரியாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கேதார் ஜாதவ், இங்கிலாந்து செல்வதற்குமுன் குணமாகாத பட்சத்தில், இவருக்கு பதிலாக அம்பதி ராயுடு சேர்க்கப்படலாம் என்று காற்று வழி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ் மொத்தம் 162 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 58 ரன்கள். ஏற்கனவே மோசமான ஃபார்மில் உள்ள ஜாதவுக்கு, இந்தக் காயம் பெரிய தலைவலியாக மாறாமல் இருந்தால் சரி.