ராஞ்சி, மே 6:கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் இன்று ராஞ்சியில் தனது ஓட்டு பதிவு செய்தார்.

மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், ஜவகர் வித்யா மந்திரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், இன்று குடும்பத்தினருடன் சென்று தமது வாக்கினை பதிவு செய்தார்.