ஆம்பூர், மே 6: ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பெண்கள், ஒரு குழந்தையும் அடங்குவர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரின் முன்பக்க டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை முதலில் வந்த தகவல் கூறுகிறது. விபத்தில் காரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 4 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.