பெண்கள் மட்டுமே பங்கேற்ற கார் பந்தயம்

சென்னை

சென்னை, மே 6:பாலின சமநிலை குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற கார் பந்தயத்தை சென்னையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் நடத்தியது.

அனைவருக்கும் ஏற்ற பொது வாகனங்களை உருவாக்க, உலக அளவில் நடக்கும் ஒரு முயற்சியாக இது அமைந்தது. இதையொட்டி கடந்த 40 ஆண்டுகளில் நடந்த கார் விபத்துகளின் போது திரட்டப்பட்ட அரிதான தகவல்கள் 40 ஆயிரம் கார் விபத்துக்களின் பின்னணி விவரங்கள் என பயன்தரும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டது.

அனைவருக்கும் ஏற்ற பொது வாகனங்களை உருவாக்கும் முயற்சி என்பது கடந்த காலங்களில் இருந்து மாறுபட்ட ஒரு முயற்சி. அதாவது, கார் ஓட்டும் ஆண்கள் விபத்து அல்லது மோதலை சந்திக்கும் போது எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பதிவு செய்து, ஆராய்ச்சி செய்ய மட்டுமே உள்ள வசதிகளுக்கு மாறாக, பெண்களும் விபத்தின் போது எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பதிவு செய்து ஆராயும் திறனைப் பெற, தற்போது முயற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வால்வோ கார் இந்திய நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் சுதீப் நாராயண் கூறுகையில், பாலின சமநிலை குறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இந்த முயற்சி குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாலின சமநிலை குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற கார் பந்தயத்தை சென்னையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.