பீகார் ஓட்டலில் இவிஎம் எந்திரங்கள் பறிமுதல்

இந்தியா

முசாஃபர்பூர், மே 7: பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஒரு ஹோட்டலில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் கைப்பற்றப்பட்ட சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில், பீகாரில் உள்ள முசாஃபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அங்குள்ள ஓட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சார் ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன.

தேர்தல் அலுவலரான அவதேஷ் குமார் என்பவர் மின்னணு வாக்கு எந்திரங்களை ஓட்டலில்  சென்று வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக பயன் படுத்துவதற்கான மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகளையே அவர் ஓட்டலில் வைத்திருந்ததாக மாவட்ட கலெக்டர் அலோக் ரஞ்சன் கோஷ் கூறியுள்ளார்.