500 நாட்களுக்கு பின்னர் ராய்டர்ஸ் நிருபர்கள் விடுதலை

உலகம்

யாங்கூன், மே 7: ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோன், க்யா சியோ ஆகிய இருவரும் 500 நாட்களுக்கு பின் மியான்மர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அதிபரின் பொதுமன்னிப்பு அடிப்படையில் வெளியே வந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள்  சிறை தண்டனை வழங்கியது.