சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படமான ‘எஸ்கே 16’-ல் அனு இமானுவேலை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரபல நடிகையும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. சிவகார்த்திகேயனின் 16-வது படமாக அமைவதால் ‘எஸ்கே-16 என்று அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள், இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைப்பதாகவும், துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் கதாநாயகியாக நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியான ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.