திருச்சி, மே 7:  பேரிடர் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புயல், மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பேசும்போது கூறியதாவது:- திருச்சி மாவட்டத்தில் பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், சாலைகளில் காற்றினால் மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின்கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப்பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விவரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம்.

இதன்மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவருத்ரய்யா, மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.