தூத்துக்குடி, மே 7: வஉசி பிறந்த ஒட்டப்பிடாரத்தில் அவர் நினைவிடத்தில் வெண்கல சிலை அமைத்து பெருமைப் படுத்தியது அதிமுக ஆட்சியில் தான். தேர்தல் முடிந்தவுடன் ஒட்டப்பிடாரத்தில் வஉசி பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தூத்துக்குடியில் தேர்தல் பொறுப்பாளருமான தளவாய்சுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற அதிமுக வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:- 2011 இல் அதிமுக வெற்றி பெற்ற பின் எங்களுக்கு அம்மா இட்ட உத்தரவே மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்பது தான் .அந்த வகையில் செக்காரக்குடியில் உள்ள பள்ளி அதிமுக அரசால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டு, ரூ.2 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டதாக கூறிய அவர் கண்டிப்பாக அனைவரும் இரட்டைஇலைக்கு வாக்களிக்கவேண்டும்.

தேர்தல் அறிக்கையாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்ன அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப் பட்டதாக தெரிவித்தார். மிக்ஸி, கிரைண்டர், தாலிக்குதங்கம் 4 கிராம் கொடுக்கப்பட்டதை 1 பவுனாக உயர்த்தி வழங்கப்பட்டது இந்தியாவிலேயே ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார்.

பெண்களுக்கு மகப்பேறு உதவி திட்டம், ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக உள்ளது என்றார். வஉசி பிறந்த ஓட்டப்பிடாரத்தில் அவர் நினைவிடத்தில் வெண்கலசிலை அமைத்து பெருமைப்படுத்தியது அதிமுக ஆட்சியில் தான். தேர்தல் முடிந்தவுடன் ஒட்டப்பிடாரத்தில் வஉசி பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார்.

இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதாபரமசிவம், ஒன்றிய செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், அண்ணா தொழிங்சங்க செயலாளர், கரங்குளம் முன்னாள் சேர்மன், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.