சென்னை, மே 7: கல்லூரி மாணவியிடம்  செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை பிடித்த பொதுமக்கள், அவருக்கு அடிஉதை கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

வில்லிவாக்கத்தை  சேர்ந்தவர் கல்லூரி மாணவி சவிதா. இவர் நேற்றிரவு 8.30 மணியளவில் செல்போன் பேசியபடியே அவரது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்மநபர்கள் சவித்தாவின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்கள் அந்த நபர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.  அவரிடம் வில்லிவாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், புரசைவாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 18) என்பதும், தப்பியோடியவர் அவரது நண்பர் சினி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, பிரேம்குமாரை கைது செய்த போலீசார்,  செல்போனை மீட்டனர்.