குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

சென்னை

விழுப்புரம், மே7: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் தனிப்பிரிவு போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.அப்போது அவர் கூறியதாவது- தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கள் போலீஸ் சரகத்திற் குட்பட்ட பகுதியில் சாராயம், கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர்கள், குற்றப்பிரிவு போலீசார் ரோந்து செல்கிறார்களா என கண்டறிந்து அவர்களுடன் இரவு நேரத்தில் தனிப்பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க துணையாக இருக்க வேண்டும்.

போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் பணிகளை கண்காணித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என்றார். கூட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.