சென்னை, மே 8: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில்  இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 80 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றனர்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வெப்பநிலை 80 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.