புதுடெல்லி, மே 8:சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வின்போது மரணம் அடைந்த நொய்டாவைச் சேர்ந்த தசை தேய்மான நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் 3 பாடங்களில் கிட்டத் தட்ட 100க்கு 100 மதிப்பெண் எடுத் துள்ளார். விநாயக் ஸ்ரீதர் என்ற அந்த மாணவர் ஸ்டீபன்ஸ் ஹாக்கிங்ஸை போல சாதனைகள் படைக்க நினைத்திருந்தார்.

ஆங்கிலத்தில் 100க்கு 100-ம், அறிவியலில் 96-ம், சமஸ்கிருதத்தில் 97 மதிப்பெண்களும் அவர் பெற்றுள்ளார். ஆனால் மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றபோது எஞ்சிய கம்ப்யூட்டர் சயின்ஸ், சமூக அறிவியல் பாடத்தேர்வுகளை எழுதாமலேயே அவர் மரணம் அடைந்துவிட்டார்.

உ.பி. மாநிலம் நொய்டாவில் உள்ள ஹம்டி சர்வதேச பள்ளியில் படித்து வந்த விநாயகர் ஸ்ரீதரை ஊனமுற்ற நிலையிலும் சாதனை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போல் புகழ்ந்து வந்தனர். சிறப்பு குழந்தைகளுக்கான பிரிவில் தேர்வு எழுதாமல் பொதுப்பிரிவின் கீழே தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயக் ஸ்ரீதர் விண்வெளி வீரராக வேண்டும் என்றும், ராமேஸ்வரத் திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தசை நோயால் பாதிக்கப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன்ஸ் ஹாக்கிங்ஸ் என்பவரும் ஊனத்தை பொருட்படுத்தாமல் பல்வேறுசாதனைகளை நிகழ்த்தினார். அதை பின்பற்றி விநாயக் ஸ்ரீதரும் சாதனைகளை நிகழ்த்த எண்ணி இருந்தார்.

தனக்கு இருந்த குறைபாடுகளை புறந்தள்ளி சாதிக்கும் மன உறுதியுடன் தேர்வுகளை எழுதிய அவரை மரணம் அணைத்துக் கொண்டது மறையாத சோகத்தை அவரது குடும்பத்தினருக்கும் உற்றார், உறவினர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது.